search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடிகர் சூர்யா"

    வெளிப்படையாக அறிவித்து விட்டு தஞ்சை மாவட்டத்திற்கு வந்தால் நடிகர் சூர்யாவுக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று வன்னியர் சங்க மாநில துணை தலைவர் கூறினார்.
    தஞ்சாவூர்:

    ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் ம.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஜெய்பீம் திரைப்பட குழுவினரை கைது செய்யக்கோரி கடந்த 2-ந் தேதி முதல் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. அமைதியாக மக்கள் வாழ்ந்து வரும் தமிழகத்தில் வன்னியர் சமூக மக்களை இழிவுபடுத்தி படம் எடுத்து வன்முறையை ஏற்படுத்தி அமைதியை சீர்குலைப்பதை முதல்-அமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இல்லையெனில் அடுத்த மாதம் (டிசம்பர்) 23-ந் தேதி தஞ்சை மாவட்டத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வன்னியர் வாழும் கிராமங்களில் ஆண்களையும், பெண்களையும், இளைஞர்களையும் திரட்டி அக்னி குண்டத்தில் நடிகர் சூரியாவின் உருவ படம் எரிக்கப்படும்.

    அந்த போராட்டத்தை தலைமை தாங்கி நடத்துபவர்களுக்கு டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி, அக்னி கும்பம் படம் பொறித்த அரை பவுன் டாலர் வழங்கப்படும்.

    அதேபோல் தஞ்சை மாவட்டத்திற்கு நடிகர் சூர்யா எப்போது வேண்டுமானாலும் வெளிப்படையாக அறிவித்துவிட்டு வரவேண்டும். அப்படி வந்தால் அவருக்கு ரூ.10 லட்சம் வரைவோலை பரிசு வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    நடிகர் சூர்யாவை கைது செய்யக்கோரி பா.ம.க.வினர் ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

    ஈரோடு:

    நடிகர் சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் படத்தில் வன்னியர்களுக்கு எதிரான காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக கூறி தமிழகம் முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சியினர் மற்றும் வன்னியர் சங்கத்தினர் நடிகர் சூர்யாவுக்கு எதிராக பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டத்தில் பா.ம.க சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் சூர்யா எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில் இன்று ஈரோடு மாநகர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தினர் சார்பில் மாநகர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் தா.ப.பரமேஸ்வரன் தலைமையில் நிர்வாகிகள் திரண்டு வந்து நடிகர் சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளித்தனர்.

    நடிகர் சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் படத்தில் வன்னியர்களை அவதூறுபடுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதற்கு நடிகர் சூர்யா உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்.அமைதியை சீர்குலைக்கும் வகையில் அவர் செயல்படுவதால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர்.

    வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் செல்வராஜ், துணைத்தலைவர் பெருமாள், துணைச்செயலாளர் கணேஷ், நிர்வாகிகள் மூர்த்தி, முருகேசன், பாலா, கோவிந்தன் உள்பட பலர் உடனிருந்தனர். 

    தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எளிய பழங்குடிமக்களின் இல்லம் தேடிச்சென்று வழங்கியிருப்பது வெறும் பட்டா அல்ல, புதிய நம்பிக்கை என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
    செங்கல்பட்டு மாவட்டம் பூஞ்சேரி பகுதியில் வாழும் நரிக்குறவர்கள் மற்றும் இருளர் இனத்தைச் சேர்ந்த 282 நபர்களுக்கு ரூ. 4.53 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். நரிக்குறவர்கள், இருளர் இன மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, ரேஷன் கார்டு, நலவாரிய அட்டை உள்ளிட்டவைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த அஸ்வினி என்ற பெண் பாசி மாலை அணிவித்து நன்றி தெரிவித்தார். விழா மேடையில் பேசிய அஸ்வினி, தனது சமுதாயத்தைச் சேர்ந்த மக்களுக்கு அடையாள அட்டை, வீட்டு மனை பட்டா உள்ளிட்ட உதவிகளை செய்து ஆதரவளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். விழா முடிந்ததும் அஸ்வினி வீட்டிற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று அவரிடம் நலம் விசாரித்து கலந்துரையாடினார்.

    நரிக்குறவர்கள் மற்றும் இருளர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு வழங்கிய நலத்திட்ட உதவிகள் குறித்த செய்திகளை படத்துடன் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

    நலத்திட்டம் வழங்கிய மு.க. ஸ்டாலின்

    மு.க. ஸ்டாலின் டுவிட்டர் செய்தியை ரீ-டுவீட் செய்துள்ள நடிகர் சூர்யா, ‘‘மாண்புமிகு தமிழக முதல்வர்  மு.க. ஸ்டாலின் அவர்கள் எளிய பழங்குடிமக்களின் இல்லம் தேடிச்சென்று வழங்கியிருப்பது வெறும் பட்டா அல்ல, புதிய  நம்பிக்கை. காலங்காலமாக தொடரும் எளிய மக்களின் இன்னல்களுக்கு, நிரந்தர தீர்வு கிடைக்கும் என்கிற  நம்பிக்கையை அளித்துள்ளது…

    நலத்திட்டம் வழங்கிய மு.க. ஸ்டாலின்

    மேலும் எளியமக்களின் தேவை அறிந்து உடன் செயலில் இறங்கிய வேகம் எங்களை பிரமிக்க வைக்கிறது. இந்த தீபாவளி திருநாளை மறக்கமுடியாத நன்னாளாக மாற்றிய மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு உளமார்ந்த நன்றி.’’ எனப் பதிவிட்டுள்ளார்.
    ×